சூர்யா அண்ணா கமெண்ட் போடுங்க! ஜோதிகாவின் வீடியோவுக்கு தெறிக்கவிடும் லைக்ஸ்
இமயலைக்கு டிரெக்கிங் சென்ற ஜோதிகாவின் வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார்.
இவர்களுக்கு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 2015ம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் ரிஎன்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து “மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்தார்.
இதற்கு மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, இந்நிலையில் இமயலைக்கு டிரெக்கிங் சென்றுள்ளார் ஜோதிகா.
இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது, பலருக்கும் முன்னுதாரணம் நீங்கள் என கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.