ஒருநாளைக்கு மட்டும் சூர்யாவை தரமுடியுமா? பெண் ரசிகையின் கேள்விக்கு ஜோதிகாவின் பதில்
தன்னுடைய கணவர் சூர்யாவை ஒருநாளைக்கு மட்டும் கேட்ட பெண் ரசிகைக்கு பதிலளித்துள்ளார் ஜோதிகா.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா- ஜோதிகாவுக்கு இடமுண்டு, 1999ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தனர்.
அப்போதே இருவருக்குள்ளும் நட்பு தொற்றிக்கொள்ள பின்னாளில் அது காதலானது, பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தியா, தேவ் என இருபிள்ளைகள் இருக்கிறார்கள், திருமணம் முடிந்ததும் நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த ஜோதிகா ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார்.
தற்போது தமிழ், மலையாளம், இந்தி மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார், இதுதவிர 2D என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
திருமணமாகி 18 ஆண்டுகளை கடந்தாலும் இன்றும் அதே காதலுடன் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.
தங்களது சந்தோஷமான தருணங்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் சூர்யாவின் ரசிகை ஒருவர், ஜோதிகாவிடம் சூர்யாவை கடனாக தரும்படி கேட்டுள்ளார்.
அதில், 15 ஆண்டுகளாக சூர்யாவின் ரசிகை நான், சில்லுனு ஒரு காதல் படத்தில் வருவது போன்று ஒருநாள் மட்டும் சூர்யாவை தரமுடியுமா? என கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜோதிகா, அதற்கெல்லாம் அனுமதி கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிகாவின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |