Photo Album:அம்பானி வீட்டு விஷேசத்தில் ஜஸ்டின் பீபர்- குவியும் வாழ்த்துகள்
பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபருடன் ஆனந்த அம்பானி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.
இவர்களது திருமணம் எதிர்வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருமணத்திற்கு தமிழ், இந்தி திரையுலக நடிகர்கள் மற்றும் உலகத்திலுள்ள பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சங்கீத் நிகழ்ச்சியில் ஜஸ்டின் பீபர்
இந்த நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் திகதி வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதில் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர் கலந்துக் கொண்டார்.
ஜஸ்டின் பீபர், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்வுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களை ஜஸ்டீன் பீபர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை இணையவாசிகள் ஒரு நிமிடம் மிரண்டு போயுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |