இதயம் மற்றும் எலும்புகளை வலிமையாக்க வேண்டுமா? இதை 5 நிமிடம் செய்ங்க
தற்போது இருக்கும் கால கட்டத்தில் மனிதர்கள் உட்காந்துகொண்டே வேலை செய்கின்றனர். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.
இதனால் நமது உடலின் ஆரோக்கியம் பூச்சியத்தில் இருக்கின்றது. இதற்காக எப்போதும் நாம் உடற்பயிற்சி செய்வத அவசியம்.
ஆனால் இந்த உடற்பயிற்சியை எப்படி இலகுவாகவும் குறைந்த நேரத்திலும் பயனாகவும் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
5 நிமிட உடற்பயிற்சி
வெறும் 5 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது இதயத்தை பலப்படுத்தவும் கால்கள் மற்றும் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும்.
ஒரு ஐந்து நிமிடங்கள் இருந்த இடத்தில் இருந்து மூச்சு பயிற்ச்சி செய்வது அவசியம். இதன் காரணமாக நுரையீரல் மற்றும் இதயம் இரண்டும் ஓய்வெடுக்க முழு நேரம் கிடைக்கும்.
இது உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தையும் குறைக்கிறது. ஒரு இடத்தில் நின்று கொண்டு மேல் இருந்து கீழ் நோக்கியவாறு கையில் சிறியளவு பாரத்துடன் இருந்து எழும்புதல்.
இதனால் தொடை மற்றும் இடுப்பு எலும்புகளை பலப்படுத்துகின்றன. 5 நிமிடங்களில் சில செட் குந்துகைகளைச் செய்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதயத் துடிப்பையும் அதிகரிக்கிறது.
இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது.தடாசனம், வஜ்ராசனம் மற்றும் உஸ்த்ராசனம் போன்ற சில எளிய யோகா ஆசனங்களை தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்வது எலும்புகளுக்கு நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் தருகிறது.
இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அடுத்ததாக இருக்கும் உடற்பயிற்ச்சி எல்லோருக்கும் தெரிந்ததே. அது தான் சைக்கிள் ஓட்டுதல்.
சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும், இது இதயம் மற்றும் எலும்புகள் இரண்டிற்கும் நன்மை பயக்கும். 5 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது கால் தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், எலும்புகளுக்கும் நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |