2027-ல் 3 முறை ராசி மாறும் குரு பகவான் -அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள்!
Jupiter Transits 3 Times in 2027 - 5 Zodiac Signs Set to Experience Great Fortune : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் தேவர்களின் குருவாகப் கருதப்படும் குரு பகவான் அறிவு, கல்வி, செல்வம், குழந்தைப் பாக்கியம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராகக் கருதப்படுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவான நிலையில் இருந்தால், வாழ்க்கையில் முன்னேற்றமும் செழிப்பும் உண்டாகும். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவானின் பெயர்ச்சி, 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாறும் குரு பகவான், 2027-ல் மூன்று முறை தனது ராசியை மாற்றுகின்றார். முதலில் ஜனவரி 25-ஆம் தேதி வக்ர நிலையில் கடக ராசிக்குள் நுழைகிறார்.
தொடர்ந்து ஜூன் மாதத்தில் சிம்ம ராசிக்கும், நவம்பர் மாதத்தில் கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகிறார். இந்த மூன்று பெயர்ச்சிகளும் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களிடமும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக, ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் நிறைந்ததாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி 2027 இல் குருவால் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் டாப் 5 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

2027ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
குடும்பத்தில் புதிய பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். குருவின் அருளால் பண வரவு அதிகரித்து, நிதி நிலையும் மேம்படும்.
சிம்மம்

2027ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் நிறைவேறும்.
வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜூன் முதல் நவம்பர் வரை தொழில் மற்றும் நிதி ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். பணத்தைச் சேமிக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
கன்னி

2027ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகளைத் தரும். நவம்பர் மாதப் பெயர்ச்சிக்குப் பிறகு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
வெளிநாட்டில் வேலை செய்யவோ, படிக்கவோ விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதுடன், நிதி நிலையும் மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம்.
தனுசு

2027ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். எதிர்பாராத வகையில் நிதி நிலையும் உயரலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள்.
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட காலப் பணப் பிரச்சனைகள் குறைந்து, புதிய வருமான வழிகளும் உருவாகும்.
மீனம்

2027ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். தன்னம்பிக்கை அதிகரித்து, மனக்குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், புதிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் அதிலுள்ள அபாயங்களை நன்கு ஆராய்வது அவசியம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆண்டின் இறுதியில் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |