டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி இயக்கம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!
Saturn Turns Direct on December 11: ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் சனிபகவான் சக்திவாய்ந்த மற்றும் மெதுவாக நகரும் கிரகங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இவர் டிசம்பர் 11ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையிலிருந்து நேரடி இயக்கத்திற்கு மாறுகிறார். நவகிரகங்களில் கர்மா, நீதி, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வுக்கு அதிபதியாக சனி பகவான் விளங்குகிறார்.

சனியின் இந்த மாற்றம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு, குறிப்பாகத் தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் இந்த காலகட்டத்தில் பெரும் சவால்கள் ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். இந்தப் பதிவில், சனியின் மாற்றத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் யார் என பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தற்போது ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் உள்ளனர். சனி 12ஆம் வீட்டில் நேரடி இயக்கத்தில் பயணிப்பதால், செலவுகள் அதிகரிக்கவும், வெளிநாட்டுப் பயணம் அல்லது வேலைக்காக இடமாற்றம் செய்வதில் தாமதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
தேவையற்ற செலவுகள் மற்றும் உறவுகளில் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம்.எனவே, பொறுமையுடனும் சரியான திட்டமிடலுடனும் செயல்படுவது அவசியம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள், வேலைகளில் தாமதம் போன்ற சிரமங்கள் ஏற்படலாம்.
மற்றவர்களைச் சார்ந்திருக்காமல், முக்கியமான பொறுப்புகளைத் தாங்களே ஏற்று செயல்படுவது நல்லது.
எதிர்காலம் குறித்த குழப்பங்களும் மன அழுத்தமும் ஏற்படலாம். நிதிநிலை சீராக இருந்தாலும், உடல்நலத்திற்காக அதிகம் செலவிட வேண்டிய சூழல் உருவாகலாம்.
மீனம்

மீன ராசியில் சனி நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால், ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்குப் பணியிடத்தில் பொறுப்புகளும் அழுத்தங்களும் அதிகரிக்கலாம்.
வேலை மாற்றம் குறித்து அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது.
திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் தொடர்பான கவலைகளும் அதிகரிக்கலாம். எனவே, தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது அவசியம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |