கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு சட்டென வாழ்க்கை மாறப்போகும் ராசிகள் யார்?
தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஜென்ம ராசி என்பது புகழ் கீர்த்தி பெற்ற ராசிகளாகும்.
குரு ஒரு ராசியில் பயணம் செய்தால் அந்த ராசிக்கு பெரும் நன்மை வந்தடையும். எதை எடுத்தாலும் அது நன்மை தரும். அந்த வகையில் குரு பகவான் தற்போது கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்ய இருக்கிறார்.
இதனால் 12 ராசிகளுக்கும் சில சில பலன் கிடைக்கும். ஆனால் குறிப்பட்ட ராசிகளின் வாழ்கை அப்படியே மாறும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மேஷம்
உங்கள் ராசிக்குள் குரு பயணம் செய்வதால் நீங்கள் தொட்ட புதிய முயற்சிகள் கைகூடும். நினைத்த காரியங்கள் வெகு விரைவில் நடக்கும்.
ஆசைப்பட்ட ஒரு விஷயம் உங்களுக்கு கிடைக்காமல் போய் இருந்தால் அது தானாகவே வந்து உங்களிடம் சேரும். தொழில் திருமணம் வியாபாரம் என எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை மட்டும் தான் வந்து சேரும்.
2.ரிஷபம்
குரு பகவான் எப்போதும் துலாம் மற்றும் ரிஷப ராசிக்கு பலன் தர மாட்டார். அப்படி அவரிடம் இருந்து பலன் கிடைத்தால் அது பெருமளவில் நன்மை தரும்.
அந்த வகையில் உங்களுக்கு செய்யும் வேலையில் மாற்றம், முன்னேற்றம் ,ஊதிய உயர்வு ,போன்றவை தேடி வரும். நோய்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல வழிகளில் பணம் வந்து கையிருப்பு அதிகமாக சேரும்.
3.மிதுனம்
உங்கள் ராசியில் குரு பகவான் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் என்ற இடத்தில் இருக்கிறார். எனவே உங்களுக்கு உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும், புதிய பதவிகள் தேடி வரும், கனவுகள் பூர்த்தியாகும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
4.கன்னி
உங்கள் ராசியில் குரு பகவான் அதிஷ்ட தானத்தில் பணயம் செய்கிறார். இதனால் உங்களுக்கு இது வரை தடைபட்ட காரியங்கள் விரைந்து நடக்கும்.
பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். பணம் சேமிப்புகள் கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும்.
வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும்.