பூசம் நட்சத்திரத்தில் குரு பிரவேசம் : நிதி நிலையில் அசுர வளரச்சி பெறும் 4 ராசிகள்!
நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்விலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
ஜோதிடத்தின் படி, குரு பகவான் சமீபத்தில் கடக ராசியில் நுழைந்துள்ளார். இதையடுத்து, ஜூன் 18 அன்று பூசம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் ஆட்சி செய்யும் இந்த நட்சத்திரத்தில் குரு ஆகஸ்ட் 18 வரை இருப்பார்.

இந்த குரு நட்சத்திர பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டமும் நல்ல பலன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதை பார்க்கலாம்.
கடகம்

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு ஒரே நேரத்தில் பல நல்ல செய்திகள் கிடைக்கும். குறிப்பாக நிதி நிலையில் அபார வளர்ச்சி உண்டாகும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நிதி நிலை மேம்பட்டு, எதிர்பாராத வருமான வாய்ப்புகள் உருவாகலாம்.
தொழிலில் புதிய திட்டங்கள் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையவும், திருமணம் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன.
தனுசு

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும். நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
வருமானம் அதிகரிப்பதுடன், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணமும் கைக்கு வந்து சேரலாம்.
இந்த காலகட்டத்தில் செய்யும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரக்கூடும். குருவின் அருளால் வசதிகளும் செழிப்பும் அதிகரிக்கும்.
தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
கன்னி

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறக்கூடும். வாழ்க்கையில் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக முடிவடையாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
பணியாளர்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் பலனும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
விருச்சிகம்

குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக துணைநிற்கும்.
திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக அமையும். வெளிநாடு செல்லும் கனவு கொண்டவர்களின் விருப்பங்கள் நிறைவேறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |