குருவின் பார்வை பட்டாச்சு... இந்த 3 ராசிகளுக்கு இனி நல்ல காலம்தான்!
ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் அதிர்ஷ்டம், அறிவு, வளர்ச்சி, செல்வம் ஆகியவற்றின் காரணியாக பார்க்கப்படுகிறார்.
தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார்.ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மரியாதை கிடைக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை.

ஆண்டுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் குரு பகவான், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவார். தற்போது ஆயில்யம் நட்சத்திரத்தின் 3ஆம் பாதத்தில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 8ஆம் தேதி 4ஆம் பாதத்திற்குள் நுழையவுள்ளார்.
இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் குருவின் இந்த நிலை மாற்றத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் 4-ஆம் கட்டத்திற்குச் செல்லும் குரு பகவானால் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பணிபுரிபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைப்பதுடன், நீண்டகாலமாக முடியாமல் இருந்த பணிகளும் வெற்றிகரமாக நிறைவேறும்.சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் 4-ஆம் கட்டத்திற்குச் செல்லும் குரு பகவானால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும்.
பணியிடத்தில் கடின உழைப்புக்கு பாராட்டு கிடைப்பதுடன், வேலை மற்றும் தொழிலில் இருந்த சிரமங்கள் குறையும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பும் ஏற்படும். குறிப்பாக நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
கடகம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் 4-ஆம் கட்டத்திற்குச் செல்லும் குரு பகவானால் கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வாழ்வின் பல துறைகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சட்ட விவகாரங்களிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |