குரு பெயர்ச்சி 2024... குபேர யோகத்தினை தட்டித் தூக்கும் ராசிகள் இதோ
குரு பகவான் மிக விரைவில் ராசியை மாற்ற உள்ள நிலையில், சில ராசியினர் குபேர யோகத்தை அடைய உள்ளனர்.
குரு பகவான்
ஜோதிடத்தில் தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவானுக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு. ஒருவரது வாழ்க்கையில் பெறும் அறிவாற்றல், குழந்தை செல்வம், கல்வி, ஆன்மீக உணர்வு, தொண்டு செய்யும் உணர்வு, அறம் மற்றும் வளர்ச்சி இவற்றிற்கு பொறுப்பான கிரகம் என்றால் அது குரு பகவான் தான்.
ஜோதிடத்தில் கிரகங்களில் மாற்றம் ஏற்படும் போது சில ராசியினரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் குரு பகவானும் அடங்குவார்.
இந்நிலையில் குரு பகவான் மே மாதம் 1ம் தேதி தனது ராசியான மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் நுழைகின்றார். இதனல் குபேர யோகத்தை அடையும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினரைப் பொறுத்தவரையில் இந்த குரு பெயர்ச்சியில் பண வரவு சிறப்பாக இருப்பதுடன், தொழிலில் புதிய வாய்ப்புகள், வெற்றிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இந்த குருபெயர்ச்சியால் ராஜயோகத்தினை அடையும் ரிஷப ராசியினருக்கு அபரிமிதமான முன்னேற்றம், வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த குருபெயர்ச்சியானது பொருளாதார ஆதாயங்களும், பொருள் வசதியும் சிறப்பாக இருக்கும். இந்த காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சுற்றுலா செல்ல இந்த காலத்தில் திட்டமிடலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு கல்வி மற்றும் தொழிலில் வெற்றி கிடைப்பதுடன், வேலையில் பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். நிதி ஆதாயங்களை பெறுவதுடன், பல வகைகளில் அனுகூலமான பலன்களை பெறலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியினால் திடீர் முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவதுடன், மாணவர்கள் கல்வியில் சிறந்தும் விளங்குவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |