12 வருடங்களுக்கு பின் நடக்கும் குரு பெயர்ச்சி! லாபம் பார்க்க போகும் மூன்று ராசிக்காரர்கள்
பொதுவாக ராசிப்பலன் கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
இதன்படி, ஏப்ரல் மாதத்தில் குரு, மேஷ ராசிக்கு இடம் பெயர இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இடம்பெறும்.
இந்த பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களுக்கு குருவால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த பெயர்ச்சியால் இழந்த செல்வங்கள் மற்றும் இழந்த வியாபாரங்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அந்த வகையில் குரு பெயர்ச்சியால் முக்கியமான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதனை தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
பணவரவில் ஜொலிக்கும் மூன்று ராசிக்காரர்கள்
1. மிதுன ராசிக்காரர்கள்
பொதுவாக மிதுன ராசிக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் குறித்த குரு பெயர்ச்சியால் எதிர்பாராத நிலைக்குச் செல்வார்கள்.
மேலும் அவர்களுக்கு பணம் வரும் வழிகளும் இந்த காலப்பகுதியில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே உங்களின் வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும். இதனால் புதிய வியாபாரங்களில் முதலீடு செய்பவர்கள் நம்பி களத்தில் இறங்கலாம்.
2. மகர ராசிக்காரர்கள்
இந்த குரு பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.
இது மட்டுமல்லாது இழந்த சொத்துக்களும் மீண்டும் கைச்சேரும். இதனை தொடர்ந்து குருவின் பார்வை 10 ஆவது வீட்டில் விழுவதால், பணியில் பதவியுயர்வு, புதிய வணிகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
3. மீன ராசிக்காரர்கள்
மீன ராசிக்காரர்களுக்கு நிதி தொடர்பான இலாபங்கள் கிடைக்கும். அத்துடன் புதையல் போன்ற விடயங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென உங்களைத் தேடி பணம் வரும். ஆனால் ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கிய விடயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.