ஆட்டத்தை ஆரம்பித்த குரு! இரண்டு ஆண் கிரகங்களின் சேர்க்கையால் 12 ராசிக்கும் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்
கிரகங்களில் குரு மற்றும் சூரியன் ஆகிய இரண்டு ஆண் கிரகங்கள் மற்றும் ஜோதிடத்தின் படி, இந்த கிரகங்களும் 2022 பிப்ரவரி மாதத்தில் இணைகின்றன.
இந்த இரண்டு கிரகங்களும் மார்ச் 14 ஆம் தேதி வரை ஒன்றாக கும்ப ராசியில் பயணிப்பார்கள்.
இப்படி குருவும் சூரியனும் ஒன்றாக கும்ப ராசியில் பயணிப்பதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சராசரியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அல்லது வியாபாரிகளுக்கு இக்காலம் சற்று கடினமாக இருக்கும். சிவனை வழிபடுவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது.
ரிஷபம்
நோய்வாய்ப்படுவற்கான வாய்ப்புள்ளது. ஆகவே கவனமாக இருங்கள். நிதி ரீதியாக, சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளதால் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்கள் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலை மேம்படும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.வியாபாரம் மற்றும் பணிபுரிபவர்கள், தங்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
நிதி நிலைமை சராசரியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அல்லது தொழில் செய்பவர்கள், தங்களின் அதிக செயல்திறனை காட்ட வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் விநாயரை வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கன்னி
இந்த சேர்க்கையால் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கிடைக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்டு முயற்சி செய்து நிர்வகிக்கவும். யாரிடமும் கடன் வாங்கிவிடாதீர்கள்.
துலாம்
இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அல்லது வியாபாரிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தம்பதிகள் தங்களின் எதிர்கால திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான காலம். இந்த ராசிக்காரர்கள் துர்கை அம்மனை வழிபடுவது மிகவும் நல்லது.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் உடல் ரீதியாக அல்லாமல் மன ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். தொழிலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாவிட்டால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த ராசிக்காரர்கள் அனுமனை வழிபடுவது நல்லது.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் எந்தவொரு நிதி விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருங்கள். வணிகம் அல்லது தொழிலுக்கான புதிய பொறுப்புகள் குறித்து புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபடுவது நல்லது.
மகரம்
சில உடல்நல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சில காரணங்களால் அதிகப்படியான செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், உங்கள் நிதிகளை கவனமாக நிர்வகிக்கவும். இந்த ராசிக்காரர்கள் அனுமனை வழிபட்டு வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கும்பம்
மன அல்லது உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். பழைய முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணமான தம்பதிகள் தங்கள் துணையின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் சிவனை வழிபடுவது நல்லது.
மீனம்
சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். வருமானத்தை விட கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். இந்த ராசிக்காரர்கள் விநாயகரை வணங்கினால் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம்.