கடகத்தில் குரு–செவ்வாய் சேர்க்கை: பணம், தொழிலில் முன்னேற்றம் காணும் ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மற்றும் குரு ஆகிய இரு கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விரு கிரகங்களும் ஒருவரது வாழ்க்கையில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை.
குறிப்பாக, ஒருவரது ஜாதகத்தில் செவ்வாயும் குருவும் வலுவான நிலையில் இருந்தால், அவர் செல்வாக்கும், தன்னம்பிக்கையும் கொண்டவராக இருப்பார்.

செவ்வாய் ஆற்றல், தைரியம், துணிச்சல் ஆகியவற்றை வழங்கும் கிரகமாகக் கருதப்படுகிறது. அதேபோல், குரு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பை வழங்கக்கூடிய கிரகமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே செவ்வாய் மற்றும் குருவின் சேர்க்கை ஜோதிடத்தில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார். இதே நேரத்தில் செவ்வாயும் கடக ராசியில் குருவுடன் இணைந்து பயணித்து வருகிறார். இவ்வாறு சக்தி வாய்ந்த இரு கிரகங்களான குருவும் செவ்வாயும் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை கடக ராசியில் ஒன்றாகப் பயணிக்கவுள்ளனர்.

குரு–செவ்வாய் கூட்டணியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படக்கூடும். குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்தக் கிரகச் சேர்க்கை மிகவும் சாதகமான பலன்களை வழங்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
அப்படி குரு - செவ்வாய் சேர்க்கையால் தொழில் மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட பலனை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 3-ஆம் வீட்டில் ஏற்பட்டுள்ள குரு-செவ்வாய் கூட்டணி, ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவு வலுப்பட்டு, பரஸ்பர புரிதல் மேம்படும். தொழில் முயற்சிகளிலும் நல்ல முன்னேற்றம் காணலாம்.
துலாம்

துலாம் ராசியின் 10-ஆம் வீட்டில் ஏற்பட்டுள்ள குரு-செவ்வாய் கூட்டணி, தொழில் மற்றும் உறவுகள் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்களைத் தரும்.
பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். நிதிநிலை மேம்படும்.
ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு வாழ்க்கைத்துணையை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.
தனுசு

தனுசு ராசியின் 8-ஆம் வீட்டில் ஏற்பட்டுள்ள குரு-செவ்வாய் கூட்டணி, முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் தரும். வெளிநாடு தொடர்பான வேலைகளில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கலாம்.
சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் தங்களின் கடின உழைப்புக்கான முழுப் பலனையும் பெறுவார்கள்.
ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கும் சூழல் உருவாகும். இம்மாதத்தில் பல நல்ல செய்திகள் கிடைத்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் மாறும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |