குரு அஸ்தமனத்தால் மாறும் பலன்கள்: சிக்கலில் மாட்டிக்கொள்ளப்போகும் ராசிகள் இவர்கள் தானாம்!
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகவும் சுபபலன்களை வழங்கும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். அதனால், குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில், குருபகவான் ஜூலை 14ஆம் தேதி முதல் அஸ்தமன நிலைக்கு செல்லவுள்ளார். இந்த நிலை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீடிக்கும். ஒரு கிரகம் சூரியனுக்கு மிகவும் அருகில் செல்லும் போது அதை "அஸ்தமனம்" என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர்.

இந்தக் காலத்தில் அந்த கிரகத்தின் சக்தி குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. குருபகவானின் இந்த அஸ்தமன காலம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தந்தாலும், சிலருக்கு சவால்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அந்த எதிர்மறை பலன்களை சந்திக்கக்கூடிய ராசிகள் எவை என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
ரிஷபம்

குருபகவானின் அஸ்தமனம் ரிஷப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். இந்தக் காலகட்டத்தில் சில நல்ல மாற்றங்கள் இருந்தாலும், சவால்கள் சற்று அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக சொத்து தொடர்பான விஷயங்களில் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் கருத்து வேறுபாடுகள் அல்லது தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம்.
மேலும், குருபகவானின் அஸ்தமனத்தால் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்பதால், உடல்நலம் மற்றும் மனநலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குருபகவானின் அஸ்தமனம் சில எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாக இது இருக்கும்.
தேவையற்ற கவலைகள் மனதை ஆக்கிரமிக்கலாம். சில சூழ்நிலைகளில் குறுக்குவழிகளைத் தேர்வு செய்யும் எண்ணம் வரலாம்.
ஆனால் அது நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டாமல் பொறுப்புடன் செயல்பட்டால் தேவையற்ற நஷ்டங்களைத் தவிர்க்க முடியும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் பெரிதாக சாதகமான பலன்களை வழங்காது. இந்தக் காலத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.
அதனால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, பேசும் போது வார்த்தைகளில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க ஊதவும்.
தனிப்பட்ட விஷயங்களையும் ரகசியங்களையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் அவை உங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |