ஜூன் மாதத்தில் 5 ராசிக்கு திறக்கும் அதிர்ஷ்ட கதவு! பணம் மழையில் நனையும் ராசி யார்?
ஜுன் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றம் என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஜுன் மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்களது ராசியை மாற்றப் போகின்றது.
ஜுன் 1ம் தேதி செவ்வாய் கிரகம் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், தொடர்ந்து ஜுன் 14ம் தேதி புதன் மிதுனத்திலும், ஜுன் 15ம் தேதி சூரிய பகவான் ரிஷப ராசியிலும் நுழைகின்றனர்.
மேலும் ஜுன் 29ம் தேதி புதன் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவதுடன், சனியும் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகின்றார்.
இத்தருணத்தில் சாதகமான பலனைப் பெறும் 5 ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு ஜுன் மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், அதிக பலன்களையும் பெறுவார்கள். முழுமையற்ற வேலைகள் எல்லாம் முடிவடைவதுடன், தொழிலில் வெற்றியும் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு ஜுன் மாதத்தில் நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதிவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபமும், செய்யும் தொழிலும் வலுவாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு ஜுன் மாதம் மிகவும் மங்களகரமாகவும், லாபகரமாகவும் இருப்பதுடன், பல பொன்னான வாய்ப்புகளும் கிடைக்கும். மாதம் முழுவதும் பொருள் வசதிகள் அதிகரிப்பதுடன், உங்களது திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு ஜுன் மாதம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் இருக்கும். பொருளாதார நிலையும் வலுவாக இருப்பதுடன், அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி, செழிப்பு இருக்கும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு மிகவும் நல்ல காலமாக இருப்பதுடன், பொருளாதார நிலையும் வலுவாகவே இருக்கும். செய்யும் தொழில் அனைத்திலும் வெற்றி கிடைப்பதுடன், நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்கும். வேலையில் பதவி மற்றும் சம்பள உயர்வு ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |