ரொமான்ஸ் ரவுண்டில் சென்றாயனுடன் தெறிக்க விட்ட ஜூலி! ஷாக்கான ரம்யாகிருஷ்ணன்... வியப்பில் நகுல்!
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்து இருக்கிறது.
இதனிடையே விஜய் டிவியில் BB Jodigal ('பிக்பாஸ் ஜோடிகள்') என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் இதில் ஜோடிகளாக, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே 'ரொமான்ஸ் ரவுண்ட்' என்கிற புதிய ரவுண்டில் பிக்பாஸ் ஜோடிகள் நடனமாடும் புரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல தென்னிந்திய நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் உள்ளிட்டோர் நடுவர்களாக வீற்றிருக்கின்றனர்.
இதில் தான் ஜூலிக்கு ஜோடியாக சென்றாயன், ‘பூக்கள் பூக்கும் தருணம்’ என்கிற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
இதில் ஜூலி மிகவும் அருமையாக உடலை வளைத்து, நெளித்து நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
ரம்யாகிருஷ்ணன் மற்றும் நகுல் அனைவருமே, “ஜூலி என்ன டான்ஸ்.. வேற லெவல்.. சூப்பர்!” என்று கமெண்டுகளை கொடுத்திருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.