27 முறை தரையில் தூக்கி வீசிய பயிற்சியாளர்: தற்காப்பு கலையால் 7 வயது சிறுவனின் அவலநிலை
தைவானில் ஜூடோ பயிற்சியாளரால் பலமுறை தூக்கி வீசப்பட்டு இரண்டு மாதமாக கோமாவில் இருந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக ஜூடோ பயிற்சிக்கு சென்ற அச்சிறுவனுக்கு ஜூடோ கற்றுத் தருவதாக கூறி அந்த அசைவுகளை ஒழுங்காக கற்று கொடுக்காத பயிற்சியாளர் 27 முறை தரையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைகுலைந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். பின்னர் மயங்கி விழுந்த நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அங்கு அவனுக்கு கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டபோது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கோமா நிலைக்கு சென்று சிறுவன் 2 மாதங்களாக கோமாவில் இருந்துள்ளான். அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளான் அச்சிறுவன். இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.