அடம்பிடித்த நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்!
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலினத்தவர்களை பற்றி அவதூறாக பேசியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் கோவிட் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இவர்களின் கோரிக்கையை ஏற்று நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் அபிஷேக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.