நான் நீதிபதி மட்டுமல்ல! ஆபாச வீடியோ நடிகரும் கூட
நீதிபதி என்பது மிகவும் பொறுப்பான ஒரு பதவியாகும். பதவி என்பதை விட அதுவொரு சேவை என்றே கூறலாம். ஆனால், நீதிபதியானவர், ஆபாச நடிகராகவும் உள்ளார் என்றால் நம்ப முடிகின்றதா?
நியூயோர்க் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர், கிரிகோரி ஏ.லாக் என்பவர். இவர் நீதிபதியாக பணியாற்றி வந்தமை மட்டுமில்லாமல் இரவில் ஆபாச வீடியோக்களை பதிவு செய்து, பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
ஆம் பகலில் நீதிபதி. இரவில் ஆபாச பட நடிகராக இருந்துள்ளார். இவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் 'காலையில் நானொரு நீதிபதி என்றும் இரவில் தொழில் சார்ந்தவர் என்றும் நானொரு முதிர்ச்சியற்றவர், முரட்டுத்தனமானவர், ஆபாசமானவன்' என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் இவ்வாறான செயல்முறையானது, நியூயோர்க் நகர அதிகாரிகளால் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்களை இதுபோன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு நியமிப்பது பொதுமக்களின் நம்பிக்கையை அழிப்பதாக இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது.