மாதம்பட்டி ரங்கராஜின் முகத்திரை கிழிந்தது... ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா!
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான ஜாய் கிரிசில்டா பாகுபலி ராஜ மாதா கெட்டப்பில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜாய் கிரிஸில்டா
கடந்த ஆண்டில் இருந்தே இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டிரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா கடந்த ஆண்டு, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரங்கராஜ் நீதிமன்ற உத்தரவின் படி செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் ஜாய் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு அவர் தான் தந்தை என்பது நிரூபனமாகியது.

அதனால் ஜாய் கிரிஸில்டாவின் நீண்ட நாள் போராட்டத்துக்கு விடை கிடைத்துள்ளது. இந்நிலையில், அழகிய பட்டு புடவையில் மணப்பெண் அழங்காரத்துடன் ராஜமாதா கெட்டபில் அசத்தல் போஸ் கொடுத்து ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |