நாடகம் ஆடி வழக்கை திசைத்திருப்பிய ரங்கராஜ்.. குழந்தையை காட்டிய ஜாய் கிரிஸில்டா
“குழந்தை முகத்தை பார்க்கும் பொழுது, இந்த வழக்கிற்கு அந்த குழந்தை தகுதியானது அல்ல, நாடகம் ஆடி முதல் மனைவியை ஏமாற்றி வைத்திருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்..” என ஜாய் கிரிஸில்டா கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஆதாரங்களை அடுக்கிய ஜாய் கிரிஸில்டா
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா இருவரும் அவரவர்கள் தரப்பில் உள்ள நியாயங்களை பதிவுகளாக பகிர்ந்து வருகிறார்கள்.

அதற்கு விளக்கம் கொடுத்த ஜாய் கிரிஸில்டா, “ இவ்வளவு நாட்களாக வராத ஸ்ருதி, ஏன் இப்போ வராங்கன்னு தெரியல, என்னை போன்று பல பெண்களை ரங்கராஜ் ஏமாற்றியிருக்கிறார். அவருடைய இந்த வேலைகளை ஒரு மனைவியாக என்னால் பொருத்துக் கொள்ள முடியாது. ஸ்ருதி வெளியிட்ட ஆதாரங்கள் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட புத்தகம் ஒன்றில் எழுதி வைக்கப்பட்டு, பூஜை செய்து வந்தேன்.
அது என்னுடைய நம்பிக்கை, அவரை நம்பி இந்த உலகிற்கு வந்த குழந்தையை இவ்வாறு கொச்சைப்படுத்துவது நன்றாக இல்லை. ஸ்ருதிக்கு தவறான மெசேஜ் அனுப்பியது நான் அல்ல, ரங்கராஜ் தான் அனுப்பினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது..” என பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |