இந்துவை திருமணம் செய்ய பழைய காதலியை கழட்டி விட்டாரா பிரேம்ஜி?
“நடிகர் பிரேம்ஜி, இந்துவை திருமணம் செய்ய பழைய காதலியை கழட்டி விட்டார்” என பத்திரிகையாளர் ஒருவர் பேசிய சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரேம்ஜி - இந்து திருமணம்
தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பிரபலமானவர் தான் நடிகர் பிரேம்ஜி அமரன்.
இவர் கடந்த ஜூன் 9ம் தேதி திருத்தணியில் இந்து என்கிற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.
எளிமையான முறையில் திருமணம் நடக்கும் என வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.
பின்னர் மணமக்கள் வரவேற்பு நிகழ்வு ஆடம்பரமாக நடந்ததாக கூறப்படுகின்றது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகின.
பத்திரிகையாளர் கூறிய உண்மை
இந்த நிலையில், நடிகர் பிரேம்ஜியின் பழைய காதல் கதை எப்படி முடிந்தது? என்பது பற்றி பத்திரிகையாளர் பரமேஸ்வரன் பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், “ நடிகை மற்றும் தயாரிப்பாளராக அறியப்பட்ட சோனாவை பிரேம்ஜி காதலித்தார். இவர்களின் காதலுக்கு கங்கை அமரன் சம்மதம் தெரிவித்தார். திருமணத்தில் முடிய வேண்டிய காதல், தோல்வியில் முடிந்தது. இதற்கான காரணம் சோனா தான் என பிரேம்ஜி கூறினார்.
பிரேம்ஜியுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்தில் இருந்த சோனா, பிரேம்ஜியை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இருவரும் ஆரம்பத்தில் இதற்கு இணைந்து இருந்தாலும் காலப்போக்கில் பிரேம்ஜிக்கு திருமணம் செய்ய ஆசை வந்து விட்டது.
இதனிடையே கோவிட் சமயத்தில் சமூக ஊடகங்கள் வழியாக பிரேம்ஜி இந்துவிடம் அறிமுகமானார். இவர்கள் இருவரும் காதலித்தனர். பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
புதிய காதலால் பழைய காதலை மறந்த பிரேம்ஜி சந்தோசமாக திருமணம் செய்து கொண்டார். மாறாக சோனா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |