ஜோதிகாவுக்கு ஜாக்கெட் வாங்கணுமாம்.. அத்துமீறிய விமர்சகர்- கொந்தளிக்கும் ரசிகர்கள்
சூர்யா- ஜோதிகா பற்றி அசிங்கமாக பேசிய விமர்சகருக்கு ரசிகர்கள் தரமான பதிலடிக் கொடுத்துள்ளனர்.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருக்கும் தம்பதிகளில் ஒருவர் தான் சூர்யா - ஜோதிகா.
இவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
தற்போது மும்பையில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆகியுள்ள இந்த ஜோடி ஹிந்தி சினிமாக்களில் பிஸியாக இருக்கிறார்கள்.
சூர்யா - ஜோதிகா பற்றி சமீபகாலமாக ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன.
அத்துமீறி பேசிய பத்திரிகையாளர்
இந்த நிலையில் பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை குறித்து பேசிய சேகுவேரா, “ "ஜெட் விமானம் வாங்கி என்ன பயன். சிவக்குமார் மாதிரி சூர்யாவால் சினிமாவில் நல்ல பெயர் வாங்க முடியுமா? சூர்யாவிடம் பல கோடி ரூபாய் பணம் இருக்கிறது. அதனால் தான் பெருமைக்கு இதையெல்லாம் செய்கிறார். ஜெட் விமானம் முதலில் வாங்க முன்னர் மனைவிக்கு புடவையும், ஜாக்கெட்டும் வாங்கிக்கொடுக்க வேண்டும்.
ஜோதிகாவுக்கு சூர்யா வாங்கிக்கொடுக்க வேண்டியது பூவையும், புடவையையும், ஜாக்கெட்டையும் தான். சூர்யா நம்ம வீட்டு பையன். அவர் தவறு செய்தால் கண்டிக்கலாம். சூர்யா என்னுடைய தம்பியாக இருந்திருந்தால் பளார் என்று அறைந்திருப்பேன். ஞானவேல் ராஜா ஒரு வியாபாரி. சூர்யாவுக்கு நல்லது கெட்டதையெல்லாம் அவர் சொல்லிக்கொடுக்கமாட்டார்" என அத்துமீறிய வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.
பார்த்த ரசிகர்கள் “இவர் என்ன ஓவரா பேசுறார்.? சூர்யா மனைவிக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதனை கூறுவதற்கு சேகுவேரா யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், அத்துமீறி நடந்து கொண்ட விமர்சகருக்கு தரமான பதிலடிக் கொடுத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |