இணையத்தில் ட்ரோல் ஆன சூர்யா... இன்ஸ்டாவில் ஜோதிகா போட்ட கமெண்ட்!
நடிகர் சூர்யா ஜிம் சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ள நிலையில், இதுகுறித்து வந்த விமர்சனத்திற்கு அவரது மனைவி ஜோதிகா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
பொதுவாக சூர்யா எந்தவொரு படத்தில் நடித்தாலும் தனது உடலை ஜிம் சென்று மிகவும் ஃபிட்டாக வைத்திருப்பது வழக்கமாகும். ஒரு தலைமுறையினரை ஜிம் நோக்கி செல்ல வைத்தவர் சூர்யா தான்.

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் உடல் கட்டமைப்பை கருத்தில் கொண்டு, ரசிகர்கள் பலரும் ஜிம் செல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் அவர் நடித்து வெளியாகிய கருப்பு படத்தில் காவக்கார கருப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவரது உடல் வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் மாறியுள்ளது. அப்பொழுது சூர்யா செய்த உடற்பயிற்சியினை அவரது ஜிம் மாஸ்டர் காணொளியாக வெளியிட்டிருந்தார்.

ஒரு உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடலை சமநிலை படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு பயிற்சிகளை கையாண்டுள்ளார். இதற்கு சிலர் வாழ்த்து தெரிவித்தாலும் பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
அதாவது சாதாரண உடற்பயிற்சியே போதுமானது... ஏன் இப்படி வித்தியாசமான பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விஷால் என்ற இன்ஸ்டா ட்ரைனர், உடல் சமநிலைக்கான பயிற்சி தான் இதுவாகும். சூர்யா இன்னும் பல ஆண்டுகளுக்கு சண்டை காட்சி, நடனகாட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளதால், அதற்காக உடல் சமநிலையில் இருப்பது முக்கியம். இந்த பயிற்சி அவசியம் என்று கூறியிருந்தார்.

இந்த காணொளிக்கு கீழ் சூர்யாவின் மனைவி ஜோதிகா, மிகச் சரியாக சொன்னீர்கள்... வலிமைப் பயிற்சியைப் போன்று சுறுசுறுப்பாக செய்யும் பயிற்சிகளும் சமநிலைக்காக செய்யும் பயிற்சிகளும் முக்கியமானவை என்று பதில் அளித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |