ஆண்டியை அரசனாக்கும் யோகங்கள்! உங்களது ஜாதகத்திலும் இருக்கின்றதா?
ஜோதிடம் என்பது இன்றைய பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது. இதில் ஜாதகக்குறிப்பும் அடங்கும்.
ஜாதகக் குறிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அண்ட வெளியிலுள்ள சில கோள்களினதும், நட்சத்திரங்களினதும் சரியான நிலைகளைக் காட்டுகின்ற ஓர் ஆவணமாகும். இது பொதுவாக ஒரு வரைபட வடிவில் இருக்கும்.
ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் பிறந்த நேரம், தாய் தந்தையரின் விபரம், நட்சத்திரம், ராசி, கிரகநிலை, இலக்கினம் இவற்றினைக் கொண்டு குறிக்கப்படுவது ஆகும்.
ஜாதகத்தினைக் கொண்டு கடந்த காலம் மற்றும் நிகழ்காலம், எதிர்காலத்தின் நம்முடைய வளர்ச்சி, இன்னல்கள் என்ன என்பதை கணிக்க முடியுமாம்.
யோகங்களும், தோஷங்களும் நிறைந்தது தான் ஜாதகம் என்று கூறப்படுகின்றது. ஜோதிடப் பகுப்பாய்வு, பலன் சொல்லுதல் போன்றவற்றைப் பொறுத்தவரை, அறிவியல் சார்ந்த வானியலுக்கும், அறிவியல் சாராத சோதிடத்துக்கும் நடுவிலுள்ள இடைமுகமே சாதகக் குறிப்பு எனலாம்.
மேலும் ஜாதகத்தினை குறித்து இன்னும் தெளிவாக தெரிந்து கொள்வதற்கும், பல சந்தேகங்களை போக்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியினை காணவும்.