ஒரே ரீசார்ஜ்: Unlimited பலன்களை கொடுக்கும் Jio
ஜியோ நிறுவனம் புதிய ஜியோ டிவி பிரீமியம் சந்தாவை இந்திய சந்தையில் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது.
170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஜியோ நிறுவனம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 30 கோடி வாடிக்கையார்களை கடந்துள்ளது.
இந்தியா தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஒற்றை சலுகையில் பயனாளர்களுக்கு அதிகபட்சமாக 14 OTT சேவைகளின் subscription வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது Jio TV பிரீமியம் subscription வழங்கும் மூன்று prepaid சலுகைகளையும் ஜியோ அறிவித்து இருக்கிறது.
சலுகைகள்
மாதம், காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இவர்களின் plan ன் விலையானது ரூ.398ல் இருந்து துவங்குகிறது.
Unlimited data,Voice call மற்றும் SMS சேவைகளானது வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் Disney Plus Hotstar, Amazon Prime, Sonyliv மற்றும் Zee5 செயலிகளை பயன்படுத்தும் சேவையும் வழங்கப்படுகிறது.
இது போன்ற சலுகைகளானது கடந்த டிசம்பர்-15,2023 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இச்சலுகைகளுடன் தினமும் 2GB data, 100 SMS போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.இப்புதிய சலுகைகளின் விலையானது ரூ.398, ரூ.1198 மற்றும் ரூ. 4498 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை அளிக்கும் சேவைகளானது Unlimited data, Voice call, SMS மற்றும் 14 OTT தளங்களை பயன்படுத்தக்கூடும் subscription களையும் வழங்கப்படுகிறது.
மூன்று prepaid சலுகைகளுக்கும் தினமும் Unlimited voice call, 100 SMS மற்றும் 2GB data போன்ற சேவை வழங்கப்படுகிறது. ரூ.398 சலுகையுடன் 12 OTT subscription களும், ரூ.1198 மற்றும் ரூ. 4498 சலுகைகளுடன் 14 OTT subscription களும் வழங்கப்படுகிறது.
ஒரு வருட ரிசார்ஜ் சலுகையையொட்டி, ஜியோ நிறுவனமானது எளிய மாத தவணை முறை வசதியை வழங்கவிருக்கிறது.
JioTV premium subscription ஆனது ஜியோ சிம் பயனாளர்களுக்கு உரியதாகும்.இதனுடன் ரூ. 148 விலையில் Data Add on Voucher ம் வழங்கப்படுகிறது.
28 நாட்களுக்குடைய இச்சலுகையில் 10 GB மற்றும் 12 OTT subscription வழங்கப்படுகிறது.கடந்த டிசம்பர்-16,2023 முதல் JioTV premium subscription சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |