ஜியோ போன் நெக்ஸ்ட்; இந்த தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிறது! அசத்தலான அறிவிப்பு
பிரபமான ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ஜியோ போன் நெக்ஸ்ட் தயாரித்துள்ளது., இந்த போன் தற்போது தீபாவளிக்கு விற்பனைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஸ்மார்ட்போனை ரூ.1,999 முன்பணம் செலுத்தி, பெற்றுக்கொள்ளாம். மீதி தொகையை மாதாந்திர தவணைகளில் கட்டிக்கொள்ளலாம். இந்த போன் பிரகதி ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது.
இந்த உலகின் மிக மலிவு விலை ஸ்மார்ட்போனை அருகிலுள்ள ஜியோ மார்ட் டிஜிட்டல் சில்லறை விற்பனையகம் மூலமோ, jio.com மூலமோ அல்லது வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்புவதன் மூலமோ பெறலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ 6, 499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் 18 மற்றும் 24 மாத பிளான்களை கொண்ட ஜியோ சிம் கார்டுடன் வருகிறது.
இதன்பின், ஜியோபோன் நெக்ஸ்ட் மொபைல் இந்தியாவை அடுத்தகட்ட டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு கொண்டு செல்லும் எனவும், பல்வேறு சிறந்த வசதிகள் இதில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.