ஸ்டார்லிங்கை போல.. சேட்டிலைட் மூலம் இணைய சேவையை வழங்கப்போகும் ஜியோ;
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது சேட்டிலைட் மூலம் இணைய சேவையை வழங்க தயாராகி வருகிறது.
ஜியோ இன்டஸ்ட்ரீஸின் ப்ளாட்ஃபார்ம் நிறுவனமும், எஸ்.ஈ.எஸ் எனப்படும் செயற்கைகோள் மூலம் சேவைகளை வழங்கும் நிறுவனத்துடன் ஒண்றிணைந்து செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி சேவையை வழங்கவுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் ஜியோ 51 சதவீதமும், எஸ்.ஈ.எஸ் (SES) 49 சதவீதமும் பங்குகளை வழங்க தக்கவைத்துகொள்கிறது.
இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைதொடர்பு சேவைக்காக விண்வெளியில் இடைப்பட்ட பூமியின் சுற்றுவட்டப்பாதையையும், பூமிக்கு இணையான சுற்றுவட்டப்பாதையையும் பயன்படுத்தவுள்ளது.
இதன்மூலம், இணையசேவையை நிறுவனங்களுக்கும், மொபைல்போனுக்கும், இந்தியா மட்டுமின்றி மற்ற அண்டைய நாடுகளுக்கும், வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இணையசேவையானது எஸ்.ஈ.எஸ் (SES) செயற்கைகோள் டேட்டா மற்றும் கனெக்டிவிட்டி சேவைகளை வழங்குவதற்கு ஒரு கருவியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.