ஜியோ ரீசார்ஜ் பிளானில் அதிரடி மாற்றம்.... குஷியில் பயனர்கள்
ஜியோவின் மூன்று மாத வேலிடிட்டியில் குறைவான விலையில் இருக்கும் பிளான் குறித்த விபரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜியோவின் அட்டகாசமான ரீசார்ஜ்
ஜியோவில் அதிக நாட்கள் வேலிடிட்டியை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு தற்போது அருமையான ரீசார்ஜ் திட்டம் இருக்கின்றது.
அதனால், ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த சிறப்பு ரீசார்ஜ் திட்டம் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். இதில், பயனர்கள் அழைப்புகள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஆப்ஸிற்கான அணுகலைப் பெறுவார்கள்.
இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.395க்கு செய்தால், 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது ஜியோ இணையதளத்திலும் My Jio ஆப்ஸிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு, நீங்கள் ப்ரீபெய்டு பிரிவில் மதிப்பு வகைக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதே சலுகையை மற்ற நெட்வெர்க் திட்டத்தின் கீழ் பெறுவது என்பது முடியாத ஒன்றாகும். ஜியோ இந்த ரீசார்ஜ் திட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் அடங்குவதுடன், இதில் 6ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.
டேட்டா பூஸ்டர் கூடுதலாக ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் மொத்தம் 1000 எஸ்எம்எஸ்களுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
தினமும் ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் சில செயலிகளுக்கான இலவச அணுகலைப் பெறுவார்கள். இதில் JioTV, Jio Cinema, Jio Cloud போன்ற பெயர்களும் அடங்கும். ஜியோ சினிமா பிரீமியம் இதில் சேர்க்கப்படவில்லை.
ஜியோவின் இந்த திட்டம் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மைஜியோ ஆப்ஸில் கிடைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |