Data காலியாகிவிட்டதா? வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் மிக மகிழ்ச்சியான செய்தி
தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு டேட்டா கடன் வழங்கும் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, கடன் வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள டேட்டாவை ஜியோ செயலி மூலம் பெற்றுக்கொண்டு, பின்னர் பணம் செலுத்தினால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், டேட்டா காலியாகும் நேரத்தில் பயனர்கள் ரூ.11 மதிப்பிலான ஒரு ஜிபி டேட்டாவை, அதிகபட்சமாக ஐந்து முறை கடனாக பெற்றுக் கொள்ளமுடியும்.
அவசர கால தேவையைக் கருத்திற்கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான வழிமுறைகள்,
* My Jioசெயலியில் மேல் இடதுபுறத்தில் உள்ள 'Menu'வை கிளிக் செய்யுங்கள்.
* அதில் மொபைல் சேவைகளின் கீழ் ‘அவசரகால டேட்டா கடன்’ஐ (Emergency Data Loan) தேர்ந்தெடுங்கள்'.
* தொடரவும்' (Proceed) என்பதை கிளிக் செய்தவுடன், தேவையான டேட்டாவை Select செய்த பின் Activate செய்யுங்கள்.