Smart Phone: குறைந்த விலையில் 5G ஸ்மார்ட் போன்... ஜியோ அம்பானி அதிரடி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட் போனை குறைந்த விலையில் வெளியிடுவதற்கான பணிகளை செய்து வருகின்றது.
ஜியோ நிறுவனம்
இந்தியாவில் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை மேலும் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி தற்போது புதிய பணிகளை தொடங்கியுள்ளார்.
தற்போது சந்தையில் மலியான 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளது. தனது பயனர்களுக்கு மலிவான 5G ஸ்மார்ட்போனை உருவாக்க அமெரிக்க சிப்மேக்கர் குவால்காமுடன் இணைந்து பணியாற்றுவதையும் பரிசீலித்து வருகிறது.
குறித்த 5ஜி நெட்வெர்க்கை மேம்படுத்துவது மட்டுமின்றி, சாதன உற்பத்தி மற்றும் கூட்டணி பிராண்டுகளிலும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜியோவின் துணைத் தலைவர் சுனில் தத் தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்
கடந்த 2016ம் ஆண்டு 4ஜி நெட்வெர்க் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே மிகவும் பிரபலமான ஜியோ தொலைபேசியை மலிவான 4ஜி தொலைப்பேசியை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்தது. இத்தருணத்தில் 135 மில்லியன் யூனிட் ஜியோ போன் விற்கப்பட்டுள்ளதாக சுனித் கூறியுள்ளார்.
தங்களது வாடிக்கையாளர்களுக்காக மலிவு விலையில் செல்போனைக் கொண்டு வர தயாராகி வருவதாகவும், Qualcomm மற்றும் பிற OEMகளுடன் நாங்கள் பணிபுரிவதற்கான காரணம் இதுவே என்றும் கூறியுள்ளார்.
மலிவான 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டங்களுடன், ஜியோ தனது ஜியோ ஃபோனின் வெற்றியைப் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |