ரிஹானாவுடன் குத்தாட்டம் போட்ட மயிலின் மகள்: வைரலாகும் வீடியோ
பிரபல ஹாலிவுட் பொப் பாடகர் ரிஹானாவுடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பாவுக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் வருகிற யூலை மாதம் 12ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
இதற்கான கொண்டாட்டாங்கள் குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1ம் திகதி முதல் 3ம் திகதி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மிகப் பிரம்மாண்டாக பெரும் பொருட்செலவில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாலிவுட், கோலிவுட், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் என இந்தியாவின் மிக முக்கியமானவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடந்த இரவு விருந்தில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அப்போது பொப் பாடகி ரிஹானாவுடன் ஜான்வி கபூர் நடனமாடியுள்ளார், இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவிர்ந்துள்ள ஜான்வி, பெண் கடவுள் இவர் என குறிப்பிட்டுள்ளார்.