நிலாவை கையில் ஏந்திய இயேசு: பார்ப்போரை பிரமிக்க வைக்கும் சம்பவம்!
பிரேசில் நாட்டில் உள்ள இயேசுவின் சிலை ஒன்று வானில் தோன்றிய நிலாவை தாக்கிப் பிடித்திருப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இயேசுவின் கையில் நிலா
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோர்கோவாடோ மலையின் உச்சியில் உள்ள இயேசு கிறிஸ்துவின் பிரம்மாண்டமான சிலையான கிறிஸ்ட் தி ரிடீமர் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.
1931 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சிலையை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பிரேசில் நகரத்தில் குவிந்த வண்ணம் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மூன்று வருட தோல்வி முயற்சிகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட லியோனார்டோ சென்ஸின் புகைப்படம் சந்திரனை இரு கைகளாலும் இயேசு பிடிப்பது போல் தெரிகிறது.
அந்த புகைப்படத்தை புகைப்படக்காரர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஷாட் சிலையிலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள நைட்ரோயின் ரியோ டி ஜெனிரோ நகராட்சியில் உள்ள இக்காராய் கடற்கரையில் இருந்து எடுத்திருக்கிறார் லியோனார்டோ சென்ஸ்.
புகைப்பட கலைஞர் சென்ஸ், பிரேசிலிய செய்தி நிறுவனமான G1 இடம், கடந்த மூன்று ஆண்டுகளாக சந்திரனின் சீரமைப்பைப் பற்றி ஆய்வு செய்ததாகக் கூறினார். கடைசியில் எல்லாம் நல்லபடியாக நடந்து தனது நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த புகைப்படத்தை பதிவு செய்ய முடிந்தது என தெரிவித்திருக்கிறார்.