தந்தையை எதிர்த்து அதிரடியாக ஜெனி எடுத்த முடிவு... பரபரப்பான ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தந்தையின் முடிவை ஜெனி அதிரடியாக பேசி நிறுத்தியுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது. குறித்த ஆர்டரில் பல சொதப்பல்களும் அரங்கேறி வருகின்றது.
இந்நிலையில் செழியன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்த ஈஸ்வரியிடம் பாக்கியா திட்டமிட்டு குழந்தையை வாங்கி ஜெனியிடம் கொடுத்துள்ளார்.
தற்போது குழந்தைக்கு மீண்டும் ஞானஸ்தானம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஜெனி அதிரடியாக பேசி நிறுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |