விண்வெளிக்கு சென்று திரும்பிய உலக பணக்காரர்! நெகிழ வைக்கும் வீடியோ காட்சிகள்
நியூ செப்பர்ட் விண்கலம் மூலம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட நபர்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்று பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
உலக பணக்காரர்களுள் ஒருவரான ஜெஃப் பெசோஸ், அமேசான் நிறுவனத்தை நிறுவியர் ஆவார்.
தற்போது விண்வெளி ஆராய்ச்சி, ஓடிடி தளத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
மேலும் குறைந்த கட்டணத்தில் விண்வெளிக்கு சுற்றுலா செல்வதை சாத்தியமாக்க ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார்.
தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த நியூ செப்பர்ட்(New Sheperd) விண்கலம் மூலம் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.
இவருடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற பெண் விமானி வாலி பங்க், 18 வயது ஆலிவர் டையமென் ஆகியோரும் பயணம் மேற்கொண்டனர்.
சுமார் 10 நிமிட பயணத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
இதன் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.