14 வயதிலேயே இப்படியா.. வனிதாவின் இளைய மகள் என்ன செய்கிறார் தெரியுமா?
வனிதாவின் இளைய மகள் என்ன செய்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்பவர் தான் நடிகர் விஜய குமார்.
இவரின் திரைபடங்கள் அனைத்தும் ஆரம்ப காலத்திலிருந்து பல ஹீட்களை கொடுத்துள்ளது.
அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் கொரோனா நேரத்தில் பீட்டர் போல் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இதிலிருந்து பல சர்ச்சைகளுக்கு முகங் கொடுத்த வனிதா பலரால் விமர்சனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் வனிதாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இளைய மகள் என்ன செய்கிறார் தெரியுமா?
இவர்களில் ஒருவர் பெரிய பொண்ணாக மாறி வனிதாவின் யூடியூப் சேனலுக்கு உதவி செய்து வருகிறார்.
அந்தவகையில் அவரின் இளைய மகள் ஜெயனிதா ராஜன் தற்போது புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
இதனை வனிதா விஜயகுமார் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ வனிதா என்ன செய்தாலும் குழந்தைகளுக்கு சரியாக வழி நடத்துகிறார்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |