பொன்னியின் செல்வனாய் ஜொலித்த ஜெயம் ரவி... எத்தனைக் கோடி சொத்துக்கு அதிபதி தெரியுமா?
சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜெயம் ரவியிடம் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது தெரியுமா?
ஜெயம்ரவி
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி. இவர் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்னரே உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மேலும், இவர் எடிட்டர் மோகனின் மகனும் இயக்குனர் ராஜாவின் அண்ணனும் ஆவார். இவரின் முதல் படம் ஜெயமாக வெற்றிபெற அடுத்தடுத்த படங்களான எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படங்களை அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 25 படங்கள் வரைக்கும் நடித்திருக்கிறார்.
மேலும், வரலாற்று கதையம்சமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி தற்போது படும்பிஸியாக இருக்கிறார்.
சொத்துமதிப்பு
இன்று தன் 43ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், ஜெயம்ரவியின் சொத்துமதிப்பு பற்றிய விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.
சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட இவரிடம் 93 கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம்.
மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்னர் ஒரு படத்திற்கு மாத்திரம் 5 கோடியை சம்பளமாக வாங்கி இருக்கிறார். இப்போது ஒரு படத்திற்கு 8 இலிருந்து 10 கோடிக்கு சம்பளம் வாங்குகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |