ஜெயம் ரவியின் மகன்களா இது? மகன்களின் புகைப்படத்தினை வெளியிட்ட ஆர்த்தி
ஜெயம் ரவி என்ற பெயரை ரவிமோகன் என்று மாற்றியுள்ள நிலையில், அவரது மகன்களின் புகைப்படங்களை இங்கு அவதானிக்கலாம்.
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அண்மையில் விவாகரத்து செய்ய முடிவெடுத்த நிலையில், இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இவரின் மகன்கள் தற்போது வளர்ந்துள்ள நிலையில், முன்னாள் மனைவி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
ஆர்த்தி வெளியிட்ட புகைப்படம்
கணவரின் நடவடிக்கையினால் அதிருப்தி அடைந்த ஆர்த்தி சில பதிவுகளை வெளியிட்டு தனது மனதில் இருந்த கஷ்டங்களை கூறியுள்ளார்.
இந்த நிலையில், அவரது மகன்களின் புகைப்படத்தை, ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதில், அவர்களின் மகன்கள் நன்றாக வளர்ந்து விட்டது தெரிகிறது.
ரவி மோகனின் முதல் மகன் ஆரவ், அவருடன் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதில் இருவரும் தந்தை-மகன் கேரக்டரில் நடித்திருப்பர்.
ஆர்த்தி ரவி, ரவி மோகனை விட்டு பிரிந்தாரே தவிர இன்னும் விவாகரத்தை வழங்கவில்லை. இந்த சமீபத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தானும் தனது மகன்களும் வாழும் வீட்டை ரவி மோகன் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை ரவி மோகனின் மகன்கள் சிறு குழந்தைகளாக இருந்தனர். ஆனால், இருவரும் தற்போது நன்றாகவே வளர்ந்து விட்டனர். ஆரவ்விற்கு தற்போது 14 வயதாகிறது, அடுத்த மகன் அயானிற்கு 10 வயதாகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |