மனைவியை பிரிந்த ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிந்துள்ள நிலையில், இன்று இவரது பிறந்தநாள் என்பதால் சொத்து மதிப்பு குறித்த விபரத்தை தெரிந்து கொள்வோம்.
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி முதன்முதலாக ஜெயம் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
பின்பு பல படங்களில் நடித்த இவர், பொன்னியின் செல்வன் படத்தில் தனது நடிப்பினை தத்ரூபமாக நடித்து அசத்தினார்.
இவர் கல்லூரி படிக்கும் போது ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவரையே கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
முதலில் இந்தத் திருமணத்தில் ரவியின் வீட்டுக்கு இஷ்டமில்லை என்றாலும் ரவி உறுதியாக இருந்ததால் அவரையே திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, இருவரும் பிரிவதாக நேற்றைய தினம் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இவர்களின் பிரிவிற்கு ஆர்த்தியின் அம்மா தான் முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவர்களின் பிரிவு திரைத்துறையினரிடம் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து மதிப்பு
இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் இப்படி ஒரு முடிவை ஜெயம் ரவி எடுத்துவிட்டாரே என்று பலரும் பேசிவருகிறார்கள்.
இந்நிலையில் ரவியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் இவரது மொத்த சொத்து மதிப்பு 75லிருந்து 80 கோடி ரூபாய்வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.
சில தொழில்களில் அவர் முதலீடு செய்து அதன் மூலமும் வருவாய் வருவதுடன், ஆடி கார், ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை சொந்தமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |