விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா: அவரே போட்ட பதிவு சோகத்தில் ரசிகர்கள்
நடிகை ராஷ்மிகாராஷ்மிக்கா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்த நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா.
தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமான இவர், நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டடப்படுகின்றார்.
இவர் தமிழில் இறுதியாக விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் நல்ல வசூலை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்தது.
புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா நடித்து வந்த நிலையில் இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன.
அதனை தொடர்ந்து பிரபல நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ராஷ்மிக்கா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிட்டாராம். மருத்துவர்கள் அவரை வீட்டில் ஓய்வெடுக்க சொல்லியிருப்பதற்கு இணங்க தற்போது ஓய்வில் இருப்பதாகவும் தற்போது குணமாகி வருவதாகவும் தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடுகையில், 'நாளைக்கு இருப்போமா என்று தெரியாது... அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |