ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து உண்மை தானா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை சட்டபூர்வமாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.
நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆர்த்தியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவரது தாய் சுஜாதாவும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார்கள்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை உறுதி செய்யும் வகையில் ஆர்த்தியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை நீக்கியதுடன் ஜெயம் ரவியை, Unfollow செய்தார்.இது மீண்டும் ரசிகர்களின் சந்தேகத்தை தூண்டியது.
அதனை தொடர்ந்து மாமியாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் இவர்களின் பிரிவிற்கு முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை சட்டபூர்வமாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தனது சமூக வளைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டு பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த பதிவு தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Grateful for your love and understanding.
— Jayam Ravi (@actor_jayamravi) September 9, 2024
Jayam Ravi pic.twitter.com/FNRGf6OOo8
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |