பாரதிராஜாவின் அந்த படத்தை 15 முறை பார்த்து ரசித்த ஜெயலலிதா.., எந்த படம் தெரியுமா?
பாரதிராஜா படம் என்றாலே எதார்த்த நடிப்பும், காதலும், கிராமத்து மனமும் நிச்சயம் இருக்கும்.
அதேபோல் அவரின் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் எப்பொழுதுமே மவுசு குறைந்ததில்லை.
இவர் இயக்கத்தில் வெளியான "கிழக்கே போகும் ரயில்" படம் ஒரு கிராமத்துக் கதை. இந்த படம் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது.
கிராமத்தில் இருந்து வந்ததால் கிராமத்து சப்ஜெக்ட் தான் இவரால் எடுக்க முடியும் என்றும், சிட்டி சப்ஜெக்ட் கதைகளை எப்படி எடுப்பார் என்று எழுந்த விமர்சனங்களுக்கு சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார்.
இவர் இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக்..டி..டிக், புதுமை பெண், முதல் மரியாதை படங்களால் தனது படைப்புகளால் வியக்க வைத்தார்.
பலரும் இவரை அரசியலுக்கு அழைத்ததுண்டு. அனால் பாரதிராஜா, "நான், ஒரு கலைஞனாக ஊரை விட்டு வந்தேன், போகும் போதும் என் உடம்பு நல்ல கலைஞன் என்ற பெயரோடு மட்டுமே போக வேண்டும்" என்று அவற்றை நிராகரித்தார்.
அப்படி ஒரு முறை ஜெயலலிதா அவர்கள் பாரதிராஜாவிடம், "My Door is always open to you Bharathiraja, anytime you can come. we got more respect to you.
உங்கள் முதல் மரியாதை படத்தை நான் 15 முறை பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவையே வியக்க வைத்த பாரதிராஜாவின் இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |