ஜே ஜே திரைப்பட ஹீரோயினின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
ஜே.ஜே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகையின் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போன புகைப்படம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
ஜே ஜே திரைப்படம்
மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்தான் ஜே ஜே. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பிரியங்கா கோதாரி. இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் ஜே ஜே சரண்.
சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இந்தத் திரைப்படமானது முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி அமைந்துள்ளது.
அதனால் அந்தப் படத்துக்கும் அதில் நடித்தவர்களுக்கும் ஏராளம் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அந்தத் திரைப்படத்தின் பின்னர் பிரியங்கா அவர்கள் எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
இந்தத் திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் பூஜா, மனோபாலா, சார்லி தாமு, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பல வருடங்களின் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியாகிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் இடம்பெற்ற வாடா வாடா பையா என்ற பாடல் மூலம் ரீ என்ரி கொடுத்தார்.
அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு பாஸ்கர் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அரசியலிலும் ஈடுபட்டார்.
தற்போது இவர் ஆள் அடையாளமே இல்லாமல் மாறிவிட்டார். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.