குற்ற உணர்வும் இல்லை, அவமானமும் இல்லை: இறுதியாக வார்த்தைகளால் தாக்கிய ஜாய் கிரிஸில்டா
குற்ற உணர்வு இல்லை, அவமானம் இல்லை, ஒரு தந்தை இருக்க வேண்டிய இடத்தில் மௌனம். அப்படியொரு தந்தை எங்கிருப்பார்? என்ற கேள்வியுடன் தற்போது ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் சர்ச்சை
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு அவபெயர் ஏற்படுத்துவதாகவும் அதனால் தனது நிறுவனத்துக்கு 15 நாட்களில் 12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இரண்டாம் மனைவி மீது மாதப்பட்டி ரங்கராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து கண்ணீருடன் ஊடகங்களிடம் பகிர்ந்துக்கொண்ட ஜாய், பணம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது இப்போது வரையில் என் வயிற்றில் வளரும் அவரின் குழந்தைக்கு எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

viral video: நவராத்திரி 2 ஆம் நாள் - துர்க்கையை அசுர வேகத்தில் அசத்தலாக அலங்காரம் செய்த ஒப்பனை கலைஞர்!
இந்நிலையில், மாதம்படடி ரங்கராஜ் தன்னை கட்டியணைத்தப்படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெயிட்டு, கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லை, அவமானம் இல்லை, ஒரு தந்தை இருக்க வேண்டிய இடத்தில் மௌனம். அப்படியொரு தந்தை எங்கிருப்பார் என குறிப்பிட்டு தனது சமூக ஊடக பக்கத்தில் புதிய சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
சட்டம், ஊடகம் என அனைத்து வகையிலும் தனது பிறவா குழந்தைக்காக நியாயம் கேட்டு, போராடிவரும் ஜாய் கிரிஸில்டாவின் ஒவ்வொரு பதிவும் நெட்சென்கள் மத்தியில் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
