ரெடியா? ஆரம்பிக்கலாமா டாடி? கமல் பாணியில் ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட அதிரடி பதிவு!
மாதம்பட்டி ரங்கராிஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா கமல் பாணியில் தற்போது வெளியிட்டுள்ள அதிரடி பதிவு இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு அவபெயர் ஏற்படுத்துவதாகவும் அதனால் தனது நிறுவனத்துக்கு 15 நாட்களில் 12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இரண்டாம் மனைவி மீது மாதப்பட்டி ரங்கராஜ் வழக்குப்பதிவு செய்திருந்தார்.
தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்கவில்லை என்பதால், ஜாய் கிரிஸில்டாவுக்கு இது குறித்து கருத்து தெரிவிக்க தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ரெடியா? ஆரம்பிக்கலாமா டாடி? இப்படிக்கு உங்கள் வாரிசு என குறிப்பிட்டு என குறிப்பிட்டு செம மாஸாக தற்போது ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |