பலரும் பார்த்து வியந்த மாமனிதன் ஜவஹர்லால் நேரு! சுவாரஸ்யமான கடந்த காலம்..
பொதுவாக நம் இந்திய மண்ணை பொருத்தமட்டில் சாதித்து விட்டு அவர்களின் அனுபவங்களை காவியங்களாக வடித்தவர்கள் தான் அதிகம்.
பிறப்பு
அந்த வரிசையில் நாம் பார்க்க போரவர் தான் ஜவஹர்லால் நேரு. இவரை பற்றி நாம் சொல்ல போனால் அதற்கு வார்த்தைகள் கூட இல்லை.
இந்திய மக்களின் நெஞ்சங்களிலும் சான்றுகளிலும் வாழ்ந்தவர் தான் ஜவஹர்லால் நேரு.
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் பிள்ளையாக இந்த உலகில் உதித்தவர் தான் நேரு.
இதனை தொடர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில வளர்ந்து கடந்த 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார்.
இதன் பின்னர் 1912 ஆம் ஆண்டு இறுதி தேர்வு பரீட்சையில் வெற்றிப் பெற்று சட்டப் பணிசெய்ய விரைந்தார்.
திருமணம்
நேருவின் வாழ்க்கையில் அடுத்தக்கட்டம் இது தான். 'கமலா கவுல்” என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, கடந்த 1916 ஆம் ஆண்டில் பிப்ரவரி 7 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி என்ற அழகிய பெண் குழந்தையும் இருந்தது. இந்த குழந்தை தான் ஃபெரோசு காந்தியை திருமணம் செய்து “இந்திரா காந்தி ” என்ற அழைக்கப்பட்டார்.
இவரை போல் இவரின் மனைவியும் சுதந்திர இயக்கத்தில் பணிபுரிந்தார். ஆனால் இது வெகு நாட்கள் நிலைக்கவில்லை.
எதிர்பாராத விதமாக நேருவை விட்டு அவரின் மனைவியும் இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து நேருவுக்கும் கடந்த 1946 ஆம் ஆண்டின் வைசிராயான இலூயி மவுன்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டனுக்கு ஒரு நெருங்கி தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியது.
ஆனால் நேருவின் கடைசிக்காலம் வரை மகளோடு தான் இருந்துள்ளார்.
நேருவின் சாதனைகள்
“வெள்ளையனே வெளியேறு ” என்ற இயக்கத்தில் பங்கெடுத்த காரணத்தினால் கடந்த 1945 ஆம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர்.
இவரின் இடைக்கால அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரியது ஆகிய காரணங்களால் பல பிரச்சினைகள் வெடித்தன.
இது தான் நேருவின் ஆட்சியை முடக்கியது. இந்த கலவரத்தை சமாதானமாக முடிக்க பல வழிகளில் முயன்ற நேரு இறுதியில் 1947 சூன் 3 -இல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவாக செயற்பட்டார்.
இப்படி பல இன்னல்களுக்கு மத்தியில் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்றார்.
அந்த பதியேற்பு விழாவில் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் "குழந்தைகள் தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள், அவர்களை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பது முக்கியமானது" எனப் பேசி வந்தார்.
இப்படி பல சாதனைகளுக்கும் தற்போது இருக்கும் பல மாற்றங்களுக்கும் சொந்தகாரர் தான் நேரு..
நேரு பற்றி சில வரிகள்
1.அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும்.
2. அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.
3. இதயத்தை பொறுத்ததே இனிய சுதந்திரம்.
4. உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
5. நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது. அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.
6. வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மை.
7. மனிதனை விட சக்தி வாய்ந்தது சூழ்நிலையே.
8. அச்சம் அறிவுக்கு ஆரம்பம் பொய்மையின் மிக நெருங்கிய நண்பன்.
9. மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.
10. கோபமாக பேசும் போது அறிவு தன் முகத்தை மூடிக்கொள்கிறது.
11. என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
12. துணிந்து செயலாற்றுவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். கோழைகளின் பக்கம் வெற்றி தலை வைத்து படுப்பதில்லை.
13. ஒரு நாட்டின் உண்மை வலிமை அதன் மக்களின் கட்டுப்பாடு நிறைந்த உழைக்கும் ஆற்றலிலே காணப்படுகின்றது. கடுமையான உழைப்பே நமக்கு செல்வதை தரும் நமது வறுமையை ஒலிக்கும் எனவே நாம் அனைவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.
14. புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் எந்த கொள்கையை நீங்கள் பின்பற்றிய போதிலும் மிகவும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.
15. பெண்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது.