இந்த நடிகர மட்டும் வச்சு நான் டைரக்ட் பண்ண மாட்டேன்! ஷாக் தகவலை பகிர்ந்த விஜய் வாரிசு
நடிகர் விஜயின் மகன் சஞ்சய் குறிப்பிட்ட சில நடிகர்களை வைத்து திரைப்படங்கள் எடுக்க மாட்டேன் என பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஸ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இதனை அடுத்து விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68வது திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.
இப்படியொரு நிலையில் நடிகர் விஜய் சினிமாவிற்கு பிரேக் விட்டு அரசியலுக்கு செல்ல போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு ஆதரவு தரும் வகையில் விஜய் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜயிற்கு எதிராக திரும்பிய மகன்
பிரபல நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு இயக்குநராக களமிறங்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகராக நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சினிமாவிற்குள் என்றி கொடுக்கும் சஞ்சய் பேட்டியொன்றில் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில, “ வளர்ந்து வரும் நடிகர்கள் அல்லது பிரபலமான நடிகர்களை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்றும் கண்டிப்பாக தன்னுடைய அப்பாவை வைத்து பண்ணப் போவதில்லை” என பேசியுள்ளாராம்.
குறித்த செய்தியை விஜய் அப்பா எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் உறுதிச் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |