Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம்
இயக்குனர் ஜேசன் சஞ்சய் தனது காதல் தோல்வி குறித்தும், தான் போலிசாரிடம் மாட்டிக்கொண்டதைக் குறித்தும் தற்போது வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
ஜேசன் சஞ்சய்
பிரபல நடிகரும், தற்போதைய முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். சிக்மா என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ப்ரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்நாடு முழுவதும் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது பல சுவாரசியமான உண்மையினை வெளியிட்டுள்ளார்.

போலிசில் மாட்டியது ஏன்?
சஞ்சய் பேசுகையில் கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் இருப்பதற்கு முடியாமல் வெளியே சென்ற முடிவு செய்து, குடும்ப நண்பரான மருத்துவர் ஒருவரின் பாஸை திருடிவிட்டு காரில் கிளம்பியுள்ளார்.
அப்பொழுது வழியில் போலிசாரிடம் மாட்டிக்கொண்டு கடைசியில் வீட்டிலும் கூறியுள்ளனர். ஆனால் வீட்டில் பெற்றோர்கள் தன்னை எதுவும் கூறாமல் ஜாலியாக சிரித்ததாக கூறியுள்ளார்.

தனது காதல்தோல்வி குறித்தும் சஞ்சய் கூறியுள்ளார். அதாவது லண்டனில் படிக்கும் போது பெண் ஒருவரை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
பின்பு இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிந்துள்ளார். அப்பொழுது வெறுமையை உணர்ந்ததாகவும், யுவன் சங்கர் ராஜாவின் சோக பாடல்களை மட்டுமே கேட்பதாக கூறியுள்ளார்.
தனக்கு ஈகோ கொஞ்சம் இருப்பதால் மீண்டும் அப்பெண்ணிடம் பேச வேண்டாம் என்று விலகி இருந்தேன். தற்போதும் அதனைக் குறித்து யோசித்தால் அவ்வாறான முடிவு எடுத்தது நல்லது என்றுதான் தோன்றுவதாக கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |