அன்று வன்கொடுமைக்கு ஆளான பெண்! இன்று பிக்பாஸ் வரை ஜொலிக்கும் பேரழகி
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்கள் வெளியுலகில் சாதனையாளர்களை வலம்வரும் இக்காலத்திலும் பெண்கள் மீதான வன்முறைகளும், அடக்குமுறைகளும் பெருகி வருகின்றன.
ஒருதலைக்காதலால் ஆசிட் வீச்சு, கொலை, 6 வயது சிறுமி கூட வன்புணர்வு என்றெல்லாம் செய்திகள் நீள்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி மீளமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர், இவர்களில் ஒரு சிலர் தாங்களாகவே தங்களுக்கான வாழ்வை வாழத் தொடங்குகின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கான ஓர் உதாரணம் தான் ஜாஸ்மின் எம் மூஸா.
கேரளாவை சேர்ந்தவர் ஜாஸ்மின் எம் மூஸா, 17 வயதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, 18 வயது ஆனவுடன் திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
திருமணம் முடிந்த அன்று தான் மாப்பிள்ளையை முதன்முறையாக பார்த்துள்ளார். அன்றைய தினம் இரவே கதற கதற அந்த நபரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கிராமம் முழுவதும் ஒலித்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
மறுநாள் தனக்கு நடந்த கொடூரம் பற்றி பேசியும் யாரும் செவிசாய்க்கவும் இல்லை. ஒரு வருடம் நிறைவடைந்த போது கொடுமைகளை தாங்க முடியாமல் விவாகரத்து பெற்றார்.
தன்னுடைய வீட்டிலும் ஜாஸ்மினையும் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க மற்றொரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நபர் அவருக்கு பிடித்த மாதிரி அமைய, ஜாஸ்மின் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டார்.
தனக்கு நடந்த அநீதிகள் பற்றியும் அவரிடம் எடுத்துக்கூற, அவரும் புரிந்து கொள்வது போன்றே நடித்துள்ளார்.
ஆனால் திருமணம் முடிந்த அன்றே ஜாஸ்மினின் கன்னத்தில் அறைந்ததுடன், கை, கால்களை கட்டிப்போட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
தினந்தோறும் இது நடக்க, யாரிடமும் சொல்லாமல் அவஸ்தையை சந்தித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதாக ஜாஸ்மினுக்கு தெரியவர, கணவரிடம் தெரிவிக்க அடுத்த நொடியே வயிற்றில் எட்டி உதைத்து ரத்தம் வந்துள்ளது.
உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்று அறுவைசிகிச்சை செய்தாலும் குழந்தை வயிற்றிலேயே இறந்து போனது. விவாகரத்து வேண்டும் என கணவரும் கேட்க, கணவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்கிறார் ஜாஸ்மின்.
குடும்பமும் ஒத்துழைக்காததால் வீட்டை விட்டு வெகுதூரம் செல்கிறார். அங்கு உடற்பயிற்சி மையத்தில் வரவேற்பாளராக பணிகிடைக்கிறது.
அங்கிருக்கும் நபர்கள் ஊக்கமளிக்க, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஜாஸ்மினுக்கு மேலோங்குகிறது. தொடர்ந்து சொந்த உழைப்பால், திறமையால் உடற்பயிற்சியாராக மாறுகிறார் ஜாஸ்மின்.
தொடர்ந்து மலையாளத்தில் பிக்பாஸில் சீசன் 4ல் கலந்து கொண்டு பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.
எனக்கான என்னுடைய வாழ்க்கையை நானே முடிவு செய்ததால் தான் இன்று ஜொலிக்க முடிகிறது என நெகிழ்கிறார் ஜாஸ்மின்