காதலுக்காக அரச குடும்பத்தை உதறிய பெண்.. தற்போதைய அவரின் நிலை என்ன தெரியுமா?
ஐப்பான் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மேக்கோ 29 (Mako). இளவரசியான இவர், ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹித்தோவின் (Naruhito) மருமகள். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தன்னுடன் படித்து வந்த கொமுரோ (Kei Komuro) என்ற இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதன்பின், ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார்.

ஆனால் ஓர் அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்பத் தகுதியை இழக்கமாட்டார். அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொடுப்பது வழக்கம்.

ஆனால், அவர் இதையெல்லாம் வேண்டாம் என கூறிவிட்டு காதலர் கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது அவர் என்ன செய்கிறார் என்ன ஆனார் என்பது பற்றி தகவல் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது வெளியான தகவலின்படி தனது கணவருடன் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
மேலும்,. கணவர் கெமுரோ சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் இவர்கள் நியூயார்க்கில் வாடகை வீடு எடுத்து தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.